Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் NEOM, DSV மெகா திட்டங்களுக்கு $10 பில்லியன் தளவாட கூட்டு முயற்சி அறிவிப்பு.

NEOM, DSV மெகா திட்டங்களுக்கு $10 பில்லியன் தளவாட கூட்டு முயற்சி அறிவிப்பு.

216
0

NEOM இன் உருமாறும் திட்டங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் $10 பில்லியன் மதிப்பிலான லாஜிஸ்டிக்ஸ் கூட்டு முயற்சியில் NEOM DSV உடன் இணைந்து, வரவிருக்கும் ஆண்டுகளில் NEOM இன் தளவாட நிலப்பரப்பை வடிவமைப்பதில் கூட்டாண்மை முக்கிய பங்கு வகிக்கும் என அறிவித்தது.

இதில் NEOM 51% பெரும்பான்மையான பங்கையும் மீதமுள்ள 49% பங்குகளை DSV வைத்திருக்கும். டிசம்பர் 31, 2031 வரை கட்டுமானத் தளவாடங்களுக்கான தேவைகளையும் அதன் பிறகு கட்டுமானம் அல்லாத தளவாடங்களில் நிலையான வளர்ச்சியையும் NEOM எதிர்பார்க்கிறது.

உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஊக்குவித்து 20,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் சவுதியின் பொருளாதாரத்தில் குறிப்பிடத் தக்க பங்களிப்பை வழங்க இந்த முயற்சி தயாராக உள்ளது.

இந்தக் கூட்டாண்மை NEOM இன் பார்வையை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், உருமாறும் பயணத்தில் இணைவதில் தனியார் துறையின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிப்பதாக NEOM இன் CEO, Nadhmi Al-Nasr வலியுறுத்தினார்.

NEOM இன் இந்த ஒத்துழைப்பு, புதுமை, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றில் முன்னணியில் உள்ள வளர்ச்சியை ஆதரிக்கும் தனித்துவமான வாய்ப்பை DSVக்கு வழங்குவதாக DSV இன் குழுத் தலைமை நிர்வாக அதிகாரியான Jens Bjørn Andersen கூறியுள்ளார்.

NEOM மற்றும் DSV இரண்டும் புதுமை மற்றும் நிலைத்தன்மையை வளர்ப்பதில் உறுதியாக உள்ளதோடு, கூட்டு முயற்சியின் வருவாயின் ஒரு பகுதி அடுத்த தலைமுறை தளவாட தீர்வுகளின் வணிகமயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு ஒதுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!