NEOM நகரில் உருவாகி வரும் சிந்தலா என்று அழைக்கப்படும் சொகுசு தீவிற்கான ‘முக்கிய பங்குதாரராக முன்னணி மத்திய கிழக்கு சார்ந்த படகுச் சேவை வழங்குனாரான JLS நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
2024 இல் திறக்கப்படும் சிந்தாலா NEOM இன் முதல் சுற்றுலா தலமாக இருக்கும், இது பார்வையாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிந்தாலா NEOM ன் 41 தீவுகளில் ஒன்றாகும்.மேலும், இது 5,000 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளைக் கொண்ட கொண்ட உலகின் முன்னணி படகு சுற்றுச்சூழலுக்கு தாயகமாக இருக்கும்.
JLS படகுகளுடன் NEOM இன் கூட்டாண்மையானது, மத்தியதரைக் கடலிலிருந்து 17 மணிநேர பயணத்தில் தீவைக் கொண்ட, ஒரு உலகளாவிய படகுப் பயண இலக்காக இருக்கும். மேலும், ஒரு விரிவான அளவிலான உலகத் தரம் வாய்ந்த சேவைகளை வழங்கும்.
130 ஆண்டுகளுக்கும் மேலான ஒருங்கிணைந்த கடல் அனுபவத்தைக் கொண்ட 34 வல்லுநர்களைக் கொண்ட ஒரு முக்கிய குழுவுடன், JLS படகுகளின் சிறந்த பணியாளர்கள் சூப்பர் யாட் என்று அழைக்கப்படும் கடல்சார் சேவைகளின் ஒவ்வொரு அம்சத்தையும் பூர்த்தி செய்யத் தயாராக உள்ளனர்.
அடுத்த தலைமுறை படகு ஆர்வலர்கள், கேப்டன்கள் மற்றும் பணியாளர்களை உருவாக்க நிறுவனம் விரிவான பயிற்சி சலுகைகளையும் வழங்குகிறது. JLS படகுப் பயிற்சி நிறுவனம் என்பது ராயல் படகு சங்கத்தின் பாடத்திட்டங்களை வழங்குவதற்காக நிறுவப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையமாகும்.
JLS Yachts CEO கேப்டன் ஸ்டீபன் கார்பெட் கூறுகையில், “சவுதி அரேபியாவின் செங்கடல் கடற்கரையில் உள்ள NEOM இன் பிரம்மாண்டமான சிந்தலா தீவின் முக்கிய பங்குதாரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நாங்கள் மிகவும்\ மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் பெருமை கொள்கிறோம் என்று கூறினார். ஜித்தா மற்றும் ரியாத்தில் உள்ள எங்கள் புதிய செயல்பாட்டு அலுவலகங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த வெளிப்பாடு மற்றும் சேவைகளை வழங்குகின்றன என்றும் கூறினார்.