சவூதி கட்டுப்பாடு மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் (நாசாஹா) ஊழல் குற்றச்சாட்டில் பலரை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சட்ட விரோதமாக நிலப் பட்டா வழங்கி, தனது உறவினர்கள் பெயரில் மனையைப் பதிவு செய்த நோட்டரி பப்ளிக் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்பு அமைச்சில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவர், மூன்று வர்த்தகர்கள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மற்றும் வர்த்தக நிறுவனமொன்றில் பணிபுரியும் அதிகாரி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வணிக நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்காக 269,179 ரியால்களை பெற்றதற்காக மெடிக்கல் சிட்டியின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேயர் அலுவலக ஊழியர் ஒருவரும், ஒரு வணிக நிறுவன ஊழியர் ஒருவரும், தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது கல்வித் துறைக்குப் பொருட்களை வழங்குவதற்காக வியாபாரத்தை ஏலம் எடுத்த ஒருவரும் கைது செய்யப்பட்னர்.
வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் இருவர் மற்றும் கல்வி அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வெளிநாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநகர சபையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், காவல் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சின் கிளையில் பணிபுரியும் ஊழியரும் செய்யப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அல்லது பொது நலனுக்குத் தீங்கு விளைவிப்பதற்காக வேலைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்று நசாஹா உறுதிப்படுத்தினார். சட்டத்தை மீறுவோர் மீது எந்தவித தயக்கமும் இன்றி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.





