KSA 2024 கட்டுமான கண்டுபிடிப்பு விருதுகளில், உலகின் மிகப்பெரிய லீனியர் பார்க் எனப் போற்றப்படும் ஸ்போர்ட்ஸ் பவுல்வர்டு திட்டம், “ஆண்டின் மெகா ப்ராஜெக்ட்” விருதைப் பெற்றுள்ளது.
இந்தப் பாராட்டு, நகர்ப்புற வளர்ச்சிக்கான திட்டத்தின் அதிநவீன அணுகுமுறை மற்றும் முதன்மையான விளையாட்டு, ஓய்வு மற்றும் சமூக மையத்தை நிறுவுவதற்கான அதன் இலக்கைச் சுட்டிக்காட்டுவதாகவும், மேலும் இந்த விருதைப் பெறுவதில் பெருமைப்படுவதாக ஸ்போர்ட்ஸ் பவுல்வர்ட் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெய்ன் மெக்கிவர்ன் கூறினார்.
இந்த விருது வழங்கும் விழா, கட்டுமானத் துறையில் சிறந்து விளங்குபவர்கள், நிறுவனங்கள் மற்றும் 35 வெவ்வேறு பிரிவுகளில் உள்ள திட்டங்களைக் கொண்டாடுவது மற்றும் கட்டுமானத் துறையில் சிறந்த கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய நிகழ்வாக விளங்குகிறது.





