கிங் பைசல் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (KFSHRC) மருந்து எதிர்ப்பு வலிப்பு நோயால் (DRE) பாதிக்கப்பட்ட நோயாளியின் மூளையில் சில்லுகளைப் பொருத்த ரோபோடிக் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது.
ரோபோடிக் அறுவை சிகிச்சையானது முன்னணி சர்வதேச மருத்துவ நிறுவனங்களில் சிக்கலான அறுவை சிகிச்சைகளைத் துல்லியமாகவும், நெகிழ்வுத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டுடன் செய்ய மருத்துவர்களுக்கு உதவுகின்ற ஒரு நவீன மருத்துவ தொழில் நுட்பமாகும்.
மத்திய கிழக்கில் முதன்முறையாக நிகழ்த்தப்பட்ட இந்த நவீன மருத்துவ முறையின் மூலம் அகற்றப்பட வேண்டிய மூளையில் உள்ள பகுதிகளைச் சில்லுகள் அடையாளம் காண்கின்றன.
KFSHRC ஆனது சிறப்பு சுகாதார சேவையை வழங்குவதில் உலகின் மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்று, பிராண்ட் ஃபைனான்ஸ் வழங்கிய 2023 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சிறந்த 250 மருத்துவமனைகள் அறிக்கையின்படி, இந்த ஆண்டிற்கான மிகவும் புகழ்பெற்ற கல்வி மருத்துவ மையங்களின் பட்டியலில் 20 வது இடத்தையும், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் முதல் இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.