கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (KAUST) வேதியியல், சுற்றுச்சூழல் அறிவியல், பொறியியல் பேராசிரியை மற்றும் கல்வி விவகாரங்களுக்கான துணைப் பேராசிரியர் சுசானா நூன்ஸ் அவர்களுக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளுக்கான 2023 ஆம் ஆண்டு L’Oréal-UNESCO பெண்களுக்கான அறிவியல் பரிசு பெற்றுள்ளார்.
வேதியியலில் அவர் செய்த சாதனைகளுக்காக இந்த அங்கீகாரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாகப் பாலிமெரிக் பொருட்கள் மற்றும் சவ்வுகளை திறமையான குறைந்த கார்பன் பிரிப்பிற்கான – பெரிய அளவிலான மருந்து, இரசாயன பயன்பாடுகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு முறைக்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ துணை இயக்குநர் ஜெனரல் Xing Qu, கூறும்போது “அவர் தனது படைப்புப் பணிகள் மற்றும் அவரது தலைமை முயற்சிகள்மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையில் ஆராய்ச்சியைத் தொடர அடுத்த தலைமுறை விஞ்ஞானிகளை ஊக்குவிக்கிறார் என்று கூறினார்.
மேலும் பேராசியர் நூன்ஸ் கூறும்போது“நான் பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். இது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான மதிப்புமிக்க விருது; இது சவுதி அரேபியாவின் Vision 2030ஐ நிரூபிக்கிறது ”என்றும் அவர் கூறினார்.
“அறிவியல் மற்றும் வணிகத்தில் பெண்களுக்கு அரசு அர்ப்பணித்து வரும் ஆதரவையும் இது தெரியப்படுத்துகிறது. திறமை, வலிமை மற்றும் ஊக்கம் கொண்ட அற்புதமான பெண்களைச் சவூதி அரேபியா கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
சர்வதேச விருதுகள் யுனெஸ்கோ தலைமையகத்தில் ஜூன் 15, 2023 அன்று, யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலே மற்றும் ஃபண்டேஷன் எல்’ஓரியல் தலைவர் ஜீன்-பால் அகோன் முன்னிலையில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.