பெர்லினில் (ITB பெர்லின்) நடைபெற்ற சர்வதேச சுற்றுலா வர்த்தக கண்காட்சியில், சவூதி தூதுக்குழுவை
சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல்-கதீப் வழி நடத்தினார். இது உலகின் மிகப்பெரிய சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் குறிப்பிடத் தக்க இருப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
நிகழ்வில் பங்கேற்ற அல்-கதீப் உலக சுற்றுலா அமைப்பு மற்றும் சுற்றுலா கவுன்சில் தலைவர்கள்ளுடன் முக்கிய சர்வதேச நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இணைந்து சவூதி பெவிலியனை விழாவில் திறந்து வைத்தார்.
சவூதி அரேபியாவின் புவியியல், தொல்பொருள் பொக்கிஷங்கள் மற்றும் நவீன சுற்றுலா இடங்களைக் கண்காட்சி எடுத்துக்காட்டியது. பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 45க்கும் மேற்பட்ட ஏஜென்சிகளுடன் சவுதியின் கண்காட்சி, சுற்றுலாத் துறையில் நாட்டின் முன்னேற்றத்திற்கான சான்றாக அமைந்தது.
100 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை 2023ல் வரவேற்பது, ஐக்கிய நாடுகளின் சுற்றுலாப் பட்டியலில் முன்னணியில் இருப்பது மற்றும் G20 உறுப்பு நாடுகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்தது ஆகியவை நாட்டின் சுற்றுலாத்துறை சாதனைகளில் அடங்கும்.





