சவூதி அரேபியா சட்ட அமலாக்கத் துறையில் சர்வதேச அமைப்புடன் ஒத்துழைக்கச் சவுதி அரேபியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் வியன்னாவில் 91வது INTERPOL பொதுச் சபையின் கூட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் பங்கேற்றுள்ளது.
சவூதி இன்டர்போலின் இயக்குனர் கர்னல் அப்துல்மாலிக் அல் சகீஹ் தலைமையிலான சவூதியின் தூதுக்குழு, சட்ட அமலாக்கத்தில் தொழில்நுட்பத்தின் பங்கை விவரித்தது .
இணையக் குற்றங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளப் புதுமையின் முக்கியத்துவத்துடன், பாதுகாப்பு செயல்திறனை மேம்படுத்துவதில் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நிகழ்வு, இன்டர்போலின் 195 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளை ஒன்றிணைக்கும் வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
உலகளாவிய பாதுகாப்பு சவால்கள், எல்லை தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஒத்துழைப்பு மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ளக் கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.





