Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் HADAF இன் நிதி நிபந்தனைகளை மீறுபவர்கள் நிதி மோசடி விதிகளின் கீழ் தண்டிப்பு.

HADAF இன் நிதி நிபந்தனைகளை மீறுபவர்கள் நிதி மோசடி விதிகளின் கீழ் தண்டிப்பு.

336
0

மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் மனித வள மேம்பாட்டு நிதியின் (HADAF) கீழ் ஆதரவு திட்டங்களை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளை உள்ளடக்கிய வரைவு ஒழுங்குமுறையை வெளியிட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்கள் நிதி மோசடி சட்டங்களின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள்.

வரைவு ஒழுங்குமுறையின்படி, HADAF ஆதரவு திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுவது, நிதியின் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது போன்ற தண்டனை நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். நிறுவனங்கள் அல்லது பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆதரவுத் தொகையின் ஒரு பகுதி அல்லது முழுவதையும் திரும்பப் பெறுதல், பயனாளியின் ஆதரவை இழப்பது மற்றும் HADAF மற்றும் நிறுவனம் அல்லது பயனாளிகளுக்கு இடையே முடிவடைந்த ஆதரவு ஒப்பந்தத்தை நிறுத்துதலும் இதில் அடங்கும்.

அந்த அடிப்படையில் மீறல்களைக் கையாள்வதற்கான ஒரு கட்டமைப்பை அமைப்பதற்காக ஒழுங்குமுறை வரைவு செய்யப்பட் டுள்ளது.

வரைவு ஒழுங்குமுறையானது தேசிய பணியாளர்களைத் தகுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் அவர்களைத் தனியார் துறையில் வேலைக்கு அமர்த்தவும் இது வழிவகை செய்கிறது.தேசிய பணியாளர்களைத் தகுதி பெறுவதற்கான செலவுகளில் பங்கேற்க அவர்களுக்குத் தனியார் துறை வேலைகளுக்குப் பயிற்சி அளிப்பதுடன், சவுதிகளை பணியமர்த்துவதை நோக்கமாகக் கொண்ட கள திட்டங்கள், மற்றும் ஆய்வுகளுக்கு நிதியளிப்பதை ஆதரிப்பதற்கும் இது வழிவகை செய்யும்.

மேலும் இது சம்பந்தமான விதிமுறைகளில் மீறல் நிரூபிக்கப்பட்டால், ஆணையம் என்ன முடிவு எடுக்கிறது என்பதைப் பொறுத்து, வழங்கப்பட்ட அனைத்து அல்லது ஒரு பகுதியையும் திரும்பப் பெற நிதி ஆணையத்திற்கு உரிமை உண்டு. நிறுவனங்கள் மற்றும் பயனாளிகள் இருவரும் குறிப்பிட்ட காலத்திற்குள் HADAF இன் அறிக்கைகளுக்கு எழுத்து மூலமாவோ அல்லது இணையம் வழியாகவோ பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர். பதிலளிப்பதில் தாமதம் ஏற்பட்டால், அனைத்து ஆதரவுத் தொகைகளையும் நிறுத்துதல் மற்றும் மீட்டெடுப்பது போன்ற பொருத்தமானதாகக் கருதும் அனைத்தையும் எடுக்க ஆணையத்திற்கு உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!