Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் GCC மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் ஒத்துழைப்பு அதிகரிப்பதை வலியுறுத்தியுள்ள கிர்கிஸ்தான் ஜனாதிபதி.

GCC மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் ஒத்துழைப்பு அதிகரிப்பதை வலியுறுத்தியுள்ள கிர்கிஸ்தான் ஜனாதிபதி.

204
0

புவியியல் தூரம் இருந்தாலும், நமது பிராந்தியங்கள் ஒரே வரலாறு, ஒரு மதம், ஒரு கலாச்சாரத்தால் இணைக்கப்பட்டுள்ளதாகவும், சகோதரத்துவத்தின் மதிப்புகள் விலைமதிப்பற்றவை என்றும் கிர்கிஸ்தான் அதிபர் சடிர் ஜாபரோவ் கூறியுள்ளார்.

ஜித்தாவில் நடைபெற்ற ஜி.சி.சி-மத்திய ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் சுதந்திரத்திற்குப் பின், ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) ஆகியவற்றின் கட்டமைப்பிற்குள், இரு நாடுகளும் ஒத்துழைப்பில் வளமான அனுபவத்தைப் பெற்றுள்ளது எனத் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மான் ஆகியோருக்கும், உச்சிமாநாட்டின் ஏற்பாட்டிற்கும், சவூதி அரேபியாவின் விருந்தோம்பலுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அரபு ஒருங்கிணைப்புக் குழு (ACG) மூலம் கிர்கிஸ்தானுக்கு பலனளிக்கும் ஒத்துழைப்புக்காக வளைகுடா நாடுகளின் கூட்டாளர்களுக்கு ஜனாதிபதி ஜபரோவ் தனது நன்றியைத் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!