சவூதி அரேபியா வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டை ஜூலை 19 அன்று ஜித்தாவில் நடத்தவுள்ளது.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான், வரவிருக்கும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இரு கூட்டங்களில் உள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளார்.
குவைத்துக்கான சவூதி தூதர் இளவரசர் சுல்தான்பின் சாத், குவைத்தின் பட்டத்து இளவரசர் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவிடம், மன்னர் சல்மான் விடுத்த அழைப்பை, குவைத் அமீரிடம் கடந்த வியாழக்கிழமை வழங்கினார்.
கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவுக்கும் மன்னர் சல்மான் அழைப்பு அனுப்பியுள்ளதாகச் சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய ஆசிய நாடுகளில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை அடங்கும்.