உக்ரைனில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என G7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஐ.நா. சாசனம் உட்பட சர்வதேச சட்டத்தை மீறும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை கண்டிப்பதாக கூறிய அவர்கள், ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தவில்லை என்றால் கடுமையான செலவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர். அணு ஆயுதத்தை ஈரான் உருவாக்கக் கூடாது என்றும், அதனை நிறுத்துமாறு ஈரானை வலியுறுத்தியுள்ளனர். ஈரான் மற்றும் சவுதி அரேபியாவின் உறவுகளை மேம்படுத்துவதற்கு முன்முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இதேபோல் தென் சீனக் கடலில் சீனாவின் கடல்சார் உரிமைகோரல்களுக்கு சட்ட அடிப்படை ஏதும் இல்லை, சீனாவின் இராணுவமயமாக்கல் நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென தூதர்கள் தெரிவித்துள்ளனர். வடகொரியாவின் ஆயுத சோதனை, அணுசக்தி திட்டங்கள், ஏப்ரல் 11 அன்று மியான்மர் இராணுவத்தின் கொடிய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட பொதுமக்களை கொன்றது உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய பிரச்சினைகளுக்கு ஜி 7 வெளியுறவு அமைச்சர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.