கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவின் இந்தூரில் நடைபெற்ற G20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான அமைச்சர்கள் கூட்டத்திற்கு மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் இன்ஜி. அஹ்மத் அல்-ராஜி தலைமை தாங்கினார்.
ஜி 20 உறுப்பு நாடுகளின் தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர்கள் தவிர, சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், பல்வேறு நாடுகளின் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
உலகளாவிய திறன் இடைவெளி, தாராளமயப் பொருளாதாரம், பொருளாதார தளங்களைப் பகிர்தல், சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பின் நிலையான நிதியுதவி போனற பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் அரசின் ஆதரவை அல்-ராஜி உறுதிப்படுத்தினார்.
திறன்கள், மனித வள மேம்பாடு மற்றும் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளுக்கு நாட்டின் அணுகுமுறையை முன்வைத்தார்.மேலும், நவீன வேலை முறைகளுக்கு ரியாத் கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளார்.
இந்த முயற்சிகள் தொடர்பான சாதனைகள், சவூதி தொழிலாளர் சந்தையில் அவை ஏற்படுத்தும் தாக்கம், நாட்டின் முக்கியமான முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார்.