சவூதி ஊடக மன்றத்தின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, ரியாத்தில் உள்ள ஃபியூச்சர் ஆஃப் மீடியா கண்காட்சியில் (FOMEX) ‘Saudipedia’ டிஜிட்டல் தளத்தைச் சவுதி ஊடகத்துறை அமைச்சர் சல்மான் அல்-டோசரி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அப்துல்லா அல்-ஸ்வாஹா மற்றும் அரபு மற்றும் சர்வதேச ஊடகங்களின் பல்வேறு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
‘Saudipedia’, சவூதியை பற்றிய விரிவான அறிவுக் குறிப்பாகப் பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல மொழிகளில் சவூதி அரேபியா பற்றிய தகவல்களுக்கான சிறந்த நடைமுறைகளின்படி வடிவமைக்கப்பட்ட தளத்தின் மூலம் ஒரு கலைக்களஞ்சிய வடிவத்தில் நம்பகமான தகவலை மேம்படுத்த முயற்சிக்கிறது.
கலாச்சாரம், சமூகம், பொருளாதாரம், அரசியல், புவியியல் மற்றும் வரலாற்று அம்சங்களில் இருந்து சவூதியின் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் கலைக்களஞ்சிய உள்ளடக்கத்தை ‘Saudipedia’ வழங்கி, சவூதியின் நாகரிக வரலாறு மற்றும் இயற்கை புவியியல் செழுமையை பிரதிபலிக்கும் வகையில் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.





