இந்த ரமலான் மாதம் ஆரம்பம் முதலே ஜூபைலை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகின்ற Universal Inspection Company தொடர் இஃப்தார் நிகழ்ச்சிகளைத் தன் கிளைகளுள்ள நகரங்களில் நடத்தி வருகின்றது.
இந்த நிறுவனத்தின் CEO மற்றும் Managing Director திருச்சியைச் சேர்ந்த தமிழரான பதுருத்தீன் அப்துல் மஜீது அவர்கள் பல ஆண்டுகளாக இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை தன் நிறுவன அலுவலகர்களின் உதவியுடன் நடத்தி ஏராளமான தமிழ்மக்களையும் பிற மொழி பேசும் வாடிக்கையாளர்கள் மற்றும் சமூக சிந்தனைக் கொண்ட தன்னார்வல அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அழைத்து இஃப்தார் விருந்தளித்தும், நினைவுப் பரிசுகள் வழங்கியும் வருகின்றார்.
இந்த ஆண்டும் ஜூபைலில் தொடங்கிய இஃப்தார் தொடர்ச்சியாக தம்மாம், ரியாத், துபா, ஜெத்தா, யான்பு உள்ளிட்ட நகரங்களில் இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்தினர். இன்று ஷஃபானியாவிலும் நடக்கின்றது.
ஜெத்தா அஜீஜியா வில்லேஜ் உணவகத்தில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சிக்கு சவூதி தமிழ் கலாச்சார மையம் தம்மாமிலும், ஜெத்தாவிலும் சவூதி தமிழ் மீடியாவுடன் இணைந்து ஒருங்கிணைத்து நடத்திய இஃப்தார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த மறுமலர்ச்சி தி.மு.கவின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான மல்லை சத்யா மற்றும் பஹ்ரைனில் இருந்து வந்து கலந்து கொண்ட வல்லம் பசீர் ஆகியோரை அழைத்து அவர்களின் வழ்த்துரை அடங்கிய சிற்றுரையுடன் மிகச்சிறப்பாக நடத்தினர்.
சிறப்பு விருந்தினர்களை UIC இன் மேனேஜிங் டைரக்டர் பதுருத்தீன் அப்துல் மஜீது அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றதோடு மிகச்சிறந்த பரிசுகளை நினைப் பரிசுகளாகவும் வழங்கி கௌரவித்தார்.
அதுபோல சிறப்பு விருந்தினர்களும் பதுருத்தீன் அப்துல் மஜிது அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து வாழ்த்துகளை கூறினர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை நிறுவனத்தின் Managing Director பதுருத்தீன் அப்துல் மஜீத் அவர்கள் வரவேற்க, வந்திருந்த விருந்தினர்களிடம் நிறுவனத்தின் சேவை குறித்த கருத்துகளை ஒரு அச்சிட்ட தாளில் அலைப்பேசி எண்களுடன் பெற்று அதனை குலுக்கல் முறையில் சுமார் 10 பேரை தேர்வு செய்து சிறப்பு விருந்தினர்களான மல்லை சத்யா மற்றும் வல்லம் பசீர் முன்னிலையில் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஜெத்தா பகுதியில் சேவையாற்றும் தமிழ் அமைப்புகள், பிற மொழி அமைப்புகள், Toast Masters உட்பட ஏராளமான தன்னார்வலர்களும், நிறுவனத்தின் வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இஃப்தார் உணவுடன் இரவு உணவும் மிகச்சிறப்பாக இருந்தது என கலந்து கொண்டவர்கள் பாராட்டிச் சென்றனர்.