கொரோனா வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பதை நிறுத்தியுள்ளதாகச் சவூதி சுகாதார அமைச்சகம் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.மேலும் இந்தப் பக்கத்தில் கொரோனா குறிது தினசரி வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிவிப்பைத் தொடர்ந்து இந்த முடிவை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.COVID-19ஐ பொது சுகாதார அவசரநிலையாக WHO இன் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், அறிவித்திருந்தார்.
கொரோனா வைரஸ் நெருக்கடி நிலையில் சுகாதார அமைச்சகம் சிறப்பாகச் செயல்பட்டு உலகளாவிய பாராட்டைச் சவூதி பெற்றது. அமைச்சகத்தின் இந்த முயற்சியால் அனைத்து சவூதி குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்பட்டது. மருந்துகள், தடுப்பூசிகள், ஆய்வகங்கள், கருவிகள் மற்றும் உபகரணங்களின் அடிப்படையில் தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கித் தொற்றுநோயை எதிர்கொண்டது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவிய நேரத்தில், நெருக்கடியைக் கட்டுப்படுத்த சவூதி தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையம் (SDAIA) மற்றும் சுகாதார அமைச்சகம் இணைந்து சவூதி கோவிட்-19 இன்டெக்ஸ் தயாரித்தது.
தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்ட
தவக்கல்னா செயலி நாட்டில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கைகுறித்த நேரடி தகவல்களை வழங்கியது.
31 மில்லியன் தனிநபர்கள் இதனால் பயணடைந்துள்ளனர் , 40 அரசு நிறுவனங்கள் இந்தச் செயலியில் பங்கேற்றனர். இது 309,000 பங்கேற்பாளர்களுடன் 39,000 தொலைநிலை சந்திப்புகளை நடத்த இந்த ஆப் உதவியுள்ளது.