ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த BRICS உரையாடல் மாநாட்டில் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் சார்பாக உரையாற்றிய சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் 2022 ஆம் ஆண்டில் BRICS நாடுகளுடனான சவூதி அரேபியாவின் மொத்த இருதரப்பு வர்த்தகம் 160 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாகவும், மேலும் சவூதி மற்றும் BRICS குழுவிற்கு இடையே உள்ள சிறப்பான உறவிற்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.
BRICS நாடுகளுடனான மொத்த இருதரப்பு வர்த்தகம் 2022 ஆம் ஆண்டில் $160 பில்லியனைத் தாண்டியதால், மத்திய கிழக்கில் BRICS குழுமத்தின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இருப்பதில் சவூதியின் பெருமையை இளவரசர் பைசல் வெளிப்படுத்தினார்.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் ஆகியோரின் வாழ்த்துகளைப் பங்கேற்பாளர்களுக்குத் தெரிவித்ததுடன், இந்த உச்சி மாநாடுகளை நடத்தி வெற்றியடைய தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ரமபோசா மேற்கொண்ட முயற்சிகளுக்குச் சவூதியின் பாராட்டுகளையும் தெரிவித்தார் இளவரசர் பைசல்.
சவூதி அரேபியா பாதுகாப்பான மற்றும் நம்பகமான எரிசக்தி ஆதாரமாகத் தொடர்வதாகவும், பயனுள்ள கருவிகள் மற்றும் ஆற்றல் சந்தைகளின் நிலைத்தன்மையை அடைவதில் ஒரு பொறுப்பான பங்கைக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
செவ்வாய்கிழமை தொடங்கிய 10வது BRICS உச்சி மாநாடு வியாழன் அன்று நிறைவடைந்தது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஜனாதிபதி விளாடிமிர் புடின் பிரதிநிதித்துவப்படுத்த பட்ட இந்த மாநாட்டில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, மேலும் சுமார் 50 தலைவர்களும் பங்கேற்றனர்.