புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) வெளியிட்ட அறிக்கைப்படி ஜூன் மாதம், 16,500 சவூதி குடிமக்கள் உள்ளூர் தொழிலாளர் சந்தையில் முதல் முறையாக இணைந்துள்ளனர்.
ஜூன் மாதத்தில் தனியார் துறையில் பணிபுரியும் குடிமக்களின் மொத்த எண்ணிக்கை 2.3 மில்லியனைத் தாண்டியுள்ளது, இவர்களில் 1.4 மில்லியன் ஆண்கள் மற்றும் 957000 பெண்கள் உள்ளனர். தனியார் துறையில் பணிபுரியும் வெளிநாட்டினரின் மொத்த எண்ணிக்கை சுமார் 9 மில்லியனை எட்டியது, இதில் 8.7 மில்லியன் ஆண்கள் மற்றும் 376,000 பெண்கள் அடங்குவர்.
தேசிய தொழிலாளர் கண்காணிப்பு அமைப்பு (NLO), சவுதி தொழிலாளர் சந்தையில் தனியார் துறை ஊழியர்களின் புள்ளிவிவரங்கள் பற்றிய விரிவான அறிக்கையை வெளியிட்டது.2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இருந்த 7.8 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 7.6 சதவிகிதமாகச் சரிவைப் பதிவு செய்துள்ளது.
மே இறுதி வரை தனியார் துறையில் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 11.3 மில்லியனை எட்டியது. அதில் ஆண்களின் எண்ணிக்கை 1.3 மில்லியனை எட்டியது, பெண்களின் எண்ணிக்கை 971000 ஐ தாண்டியது.
தனியார் துறையில் பணிபுரியும் வெளிநாட்டினரின் மொத்த எண்ணிக்கை சுமார் 9 மில்லியன் ஆகும், இதில் 8.6 மில்லியன் ஆண்கள் மற்றும் 371000 பெண்கள் உள்ளனர்.