Qiddiya Investment Company (QIC) ஒவ்வொரு ஆண்டும் 800,000 வருகைகளைப் பெறும் வகையில் கிடியா நகரத்தின் முதல் கலாச்சார சொத்தாக ஒரு நிகழ்ச்சி கலை மையத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த மையம் உலகின் முதல் மல்டி யூஸ் கேமிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் மாவட்டம், பிரின்ஸ் முகமது பின் சல்மான் ஸ்டேடியம், மோட்டார்ஸ்போர்ட் டிராக், டிராகன் பால் தீம் பார்க் மற்றும் சவுதி அரேபியாவின் முதல் நீர் தீம் பூங்காவான அக்வாரேபியா ஆகியவற்றை உள்ளடக்கியது.
சவுதி அரேபியாவின் கலாச்சார நிலப்பரப்பை உயர்த்தி, படைப்பாற்றல் மற்றும் புதுமைகளின் மையமாகக் கிடியா நகரம் இருக்கும் என அப்துல்லா அல்தாவூத், கிடியா முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார். நவீன வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் திறமையை வளர்ப்பதன் மூலம், இந்த மையம் ஒவ்வொரு ஆண்டும் 260 க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை வழங்குகிறது.
இந்தக் கலை மையம்,100 க்கும் மேற்பட்ட படைப்பு மற்றும் கலாச்சார துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மையம் கலைக்கூடங்கள் மற்றும் பசுமையான இடங்கள் மூலம் கலாச்சார அனுபவம் மேம்படுத்தப்படும். மையத்தின் தனித்துவமான கட்டிடக்கலை குடிமை அடையாளத்தைக் குறிக்கிறது.