சவூதி அரேபியா 935,966 ஹஜ் பயணிகளை விமானம், தரை மற்றும் கடல் துறைமுகங்கள் வழியாக வரவேற்று கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வெளிநாட்டு பயணிகள் வருடாந்திர ஹஜ் பயணத்திற்கு வந்தடைந்ததாகப் பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் (ஜவாசாத்) தெரிவித்துள்ளது.
896,287 பயணிகள் விமானம் வழியாகவும் 37,280 பயணிகள் தரை வழியாகவும், 2,399 பேர் கடல் துறைமுகங்கள் வழியாகவும் வந்துள்ளதாகச் சவுதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
பல்வேறு மொழிகளில் தேர்ச்சி பெற்ற சவுதி அரேபியர்களால் இயக்கப்படும் சர்வதேச துறைமுகங்களில் மேம்பட்ட தொழில்நுட்ப சாதனங்களை வழங்குவதன் மூலம் பயணிகளுக்கான நுழைவு நடைமுறைகளை இயக்குநரகம் மேம்படுத்துகிறது.





