Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி அறிவுசார் சொத்துரிமை ஆணையத்தின் தலைவராக ஷிஹானா அலசாஸ் நியமனம்.

சவூதி அறிவுசார் சொத்துரிமை ஆணையத்தின் தலைவராக ஷிஹானா அலசாஸ் நியமனம்.

140
0

சவூதி அரேபிய அறிவுசார் சொத்துரிமை ஆணையத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக அரச நீதிமன்றத்தின் ஆலோசகர் ஷிஹானா அலசாஸை நியமித்துப் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான், அமைச்சர்கள் குழுவின் துணைச் செயலர் பதவியில் இருந்து அலசாஸை விடுவிக்கும் அரச ஆணையை வெளியிட்டார். மன்னரால் நியமிக்கப்பட்ட பிறகு இப்பதவியை வகிக்கும் முதல் பெண் இவர் ஆவார்.

அலசாஸ் அமைச்சரவையின் துணைச் செயலாளராக நியமிக்கப்படும் வரை பொது முதலீட்டு நிதியத்தின் (PIF) இயக்குநர்கள் குழுவின் பொதுச் செயலாளராகவும் பொது ஆலோசகராகவும் பணியாற்றினார். அலசாஸ் பொது முதலீட்டு நிதியம் மற்றும் பிற நிர்வாகக் குழுக்களின் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

அலாசாஸ் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் பட்டம் பெற்றவர். பல சர்வதேச சட்ட நிறுவனங்களில் ஒன்பது ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்தார். 2017 இல் பரிவர்த்தனைகளின் தலைவராகப் பொது முதலீட்டு நிதியில் சேர்ந்தார்.

சவூதி அரேபியாவின் முதல் பெண் வழக்கறிஞர்களில் ஒருவராக அலசாஸ் கருதப்படுகிறார். அலசாஸ் 2016 இல் “தி டீல் மேக்கர்” என்று பெயரிடப்பட்டார் மற்றும் 2020 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் மிடில் ஈஸ்ட் மூலம் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!