சவூதி அரேபியாவில் ஜூன் 1-ம் தேதி முதல் இந்த ஆண்டின் கோடை காலம் தொடங்கும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையம் (NMC) தெரிவித்துள்ளது. NMC முன்னறிவிப்பின்படி, கிழக்கு மற்றும் மத்திய நகரங்களில் வெப்பநிலை உயரும், நாட்டில் கோடையில் சராசரி மழைப்பொழிவை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
NMC செய்தித் தொடர்பாளர் ஹுசைன் அல்-கஹ்தானி, வரவிருக்கும் கோடைக் காலத்தில் மிகவும் வெப்பமான நிலைகளை ஆரம்பக் குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் முதல், வசந்த காலத்தின் முடிவில் வெப்பநிலை உயரத் தொடங்கியது.சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழை மற்றும் மணல் புயல் காரணமாக வானிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.





