Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி அரேபியாவில் வசந்த காலத்தின் இறுதியில் அல்-அஹ்சா பகுதி அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளது.

சவூதி அரேபியாவில் வசந்த காலத்தின் இறுதியில் அல்-அஹ்சா பகுதி அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளது.

126
0

சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் வசந்த காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பநிலை உயரத் தொடங்கியுள்ளது.தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) அறிக்கைப்படி, செவ்வாய் அன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள அல்-அஹ்சாவில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அல்-சௌதாவில் 21 டிகிரி செல்சியஸ் குறைந்த வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

39 டிகிரி செல்சியஸுடன் மக்கா, ஷரூரா, அல்-சமான், அல்-தஹ்னா பாலைவனம் மற்றும் ரவ்தத் அல்-தன்ஹாட் ஆகிய பகுதிகள் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது.

NCM அறிக்கை கிழக்கு மாகாணம், ரியாத், நஜ்ரான், ஜசான் மற்றும் ஆசிர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணித்துள்ளது. அல்-ஜுஃப், வடக்கு எல்லைப் பகுதி மற்றும் மதீனாவின் சில பகுதிகளில் தூசி நிறைந்த காற்று தொடரும், மேலும் இது மக்காவின் சில பகுதிகளுக்கும் பரவும் என்று NCM அறிக்கை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!