கடந்த வியாழன் அன்று பொருளாதார மற்றும் மேம்பாட்டு விவகார கவுன்சிலின் தலைவரான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சவூதியில் உள்ள ரியாத், ஜசான், ராஸ் அல்-கைர் மற்றும் கிங் அப்துல்லா நகரம் ஆகிய இடங்களில் நான்கு புதிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களை தொடங்கி வைத்தார்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், மூலம் பல்லாயிரக்கணக்கான வேலைகளை உருவாக்குவது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என இளவரசர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZs) தற்போதுள்ள தேசிய உத்திகளை ஆதரித்து ,சர்வதேச கட்டமைப்புகளுடன் புதிய இணைப்புகளை உருவாக்குகிறது.
இதில் கார்ப்பரேட் வரி விகிதங்கள், சுங்க வரி விலக்கு, உற்பத்தி உள்ளீடுகள், இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், நிறுவனங்களின் வெளிநாட்டு உரிமை ஆகியவையும் இதில் அடங்கும்.
இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தும், வேலைகளை உருவாக்கும். விதிமுறைகள் மற்றும் ஊக்கத்தொகைகளின் விரிவான திட்டத்துடன், இந்த SEZகள் வெளிநாட்டு முதலீட்டிற்கு சலுகைகளை வழங்குகின்றது.
இந்த நான்கு SEZகள், நாட்டின் இலவச மண்டல முன்முயற்சிகளை உருவாக்குகின்றது.
இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பல உலகளாவிய வணிகங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு புதிய தீர்வுகளை வழங்குகின்றது.