ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் தோஹாவில் இருந்து வந்த Flynas விமானம் எண். XY 224 தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து சறுக்கியதால் பயணிகளுக்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை இரவு 7:34 மணிக்கு நிகழ்ந்தது.
பின்னர் விமானம் நியமிக்கப்பட்ட டாக்ஸிவேக்கு வந்தடைந்தது, அங்குப் பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர் மற்றும் விமான நிலைய நிர்வாகத்தால் அவர்களின் உடல்நிலை சரிபார்க்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலை Flynas விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே ஓடுபாதையில் இருந்து சறுக்கி ஓடுபாதையை தாண்டிச் சென்று சைன் போர்டில் மோதியதாகத் தேசிய சாலை பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியும் ஒரு பகுதியாக, தகவல்களைச் சேகரிப்பதற்காக மையத்தில் உள்ள சிறப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது என்று மையம் கூறியது.





