ஹஜ் 2024ஆம் ஆண்டிற்கான அங்கீகரிக்கப்படாத சேவைகளைச் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் மோசடியான ஹஜ் நிறுவனங்கள் குறித்து பயணிகளுக்கு ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயணிகளுக்குச் செல்லுபடியாகும் ஹஜ் விசா தேவை, அதைச் சவூதி அதிகாரிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் மட்டுமே பெற முடியும். ஹஜ் மற்றும் உம்ராவுக்கான உச்ச ஆணையத்தின் கூட்டு முயற்சிகள் 25 க்கும் மேற்பட்ட மோசடி ஆபரேட்டர்களை கைது செய்ய வழிவகுத்தது.
சந்தேகத்திற்கிடமான ஹஜ் சேவை விளம்பரங்களைப் பற்றிப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், மேலும் தகவலுக்கு, பார்வையாளர்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடக கணக்குகளைப் பார்க்குமாறும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.





