நகர்ப்புற திட்டமிடலில் உள்ளூர்வாசிகளை ஈடுபடுத்தும் முயற்சியில், சமூக ஊடக தளங்கள் மூலம் நகர்ப்புற திட்டமிடல் பற்றிய கருத்துக்களை வழங்கக் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை ஹெயில் நகராட்சி அழைத்துள்ளது.
நகரின் நிலையான வளர்ச்சிக்குச் சமூக பங்களிப்பின் முக்கியத்துவத்தை நகராட்சி எடுத்துரைத்தது. பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேவைகளுக்கான தங்கள் யோசனைகளைப் பகிர்ந்து கொள்ள நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
மதம், கல்வி, மற்றும் சுகாதார சேவைகள், பூங்காக்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள், சைக்கிள் பாதைகள் மற்றும் வங்கிச் சேவைகள் போன்ற பல்வேறு வசதிகள் குறித்த பொதுமக்களின் கருத்தைக் கருத்தில் கொண்டு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நகராட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.





