ஆறு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் ராஜ் ஓட்டிய வாகனம் யான்பு அருகே ஏற்பட்ட விபத்தில் இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதியதில் மற்றொரு காரில் இருந்த இரண்டு சவுதி நாட்டைச் சேர்ந்தவர்களும், ஜேக்கப் ராஜ் அவர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த இன்னொருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். ஜேக்கப் ராஜ்ஜிற்கு இரண்டு கால்களும் சேதமாகி வெட்டி எடுக்கப்பட்டது.
மேலும் மரணமானவர்களின் குடும்பத்தார்கள் ஜேக்கப் ராஜ்ஜிற்கு மன்னிப்பு வழங்காத காரணத்தினால் இவர் தாயகம் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
ஆகவே ஜேக்கப் ராஜ்ஜின் குடும்பத்தினர் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நல சங்கம் நிர்வாகிகளுக்குத் தொடர்புகொண்டு உதவியை நாடினர்.
அதனைதொடர்ந்து வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நலச் சங்கம் நிர்வாகிகள் கடந்த ஆறு வருடங்களாக முக்கியமாக மருத்துவ உதவி, சட்ட ஆலோசனை போன்ற பல்வேறு உதவிகளைச் செய்து வந்தனர்.
ரமலான் மாதத்தை முன்னிட்டு சவுதி அரேபிய அரசாங்கம் ஜேக்கப் ராஜ்ஜிற் பொது மன்னிப்பு வழங்கி உள்ளது.
அதனைதொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி ஜேக்கப் ராஜ் தாயகம் திரும்பினார். இவர் தாயகம் செல்ல உறுதுணையாக இருந்த வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நலச் சங்கம் நிர்வாகிகளுக்கும், பல்வேறு பொருளாதார உதவிகளை மேற்கொண்ட தமிழ் அமைப்புகளுக்கும், மனிதநேயச்சேவையில் திறம்பட செயல்பட்ட வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தின் மண்டல செயலாளர் ஆடுதுறை முகமது அன்வர், மண்டல பெருளாளர் நவ்ஸாத் அலி மற்றும் ஜித்தா மண்டல தலைவர் ஜக்கரியா ஷெரிப் அவர்களுக்கும் ஜேக்கப் ராஜ் மற்றும் அவரின் குடும்பத்தினர் மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.





