சவூதி மத்திய வங்கி (SAMA) 2023 ஆம் ஆண்டில் அனைத்து சில்லறை நுகர்வோர் பரிவர்த்தனைகளில் 70% ஆக இருந்த மின்னணுக் கொடுப்பனவுகளின் பயன்பாட்டில் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.
முந்தைய ஆண்டில் 8.7 பில்லியனாக இருந்த மின்னணு பரிவர்த்தனைகள், 2023 ஆம் ஆண்டில் 10.8 பில்லியனாக உயர்ந்திருப்பது நுகர்வோர் மற்றும் வணிகர்களிடையே டிஜிட்டல் கட்டண முறைகளுக்கான வளர்ந்து வரும் நம்பிக்கையையும் விருப்பத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
தேசிய கட்டண முறைகளின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் நிதிச் சமூகத்தில் உள்ள கூட்டு முயற்சிகள் இந்த வளர்ச்சிக்குக் காரணம் என SAMA தெரிவித்துள்ளது.
இது நுகர்வோருக்குக் கிடைக்கும் கட்டணத் தேர்வுகளை வளப்படுத்துவதையும், தடையற்ற டிஜிட்டல் கட்டணத் தீர்வுகள் மூலம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.





