2023 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 16.3 சதவீதமாக இருந்த சவூதி பெண்களின் வேலையின்மை விகிதம் 2.6 சதவீதம் குறைந்து 13.7 சதவீதத்தை எட்டியுள்ளது. சவூதி ஆண்களின் வேலையின்மை விகிதம் கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்த அதே அளவாக நான்காவது காலாண்டிலும் 4.6 சதவீதமாக நிலையானதாக உள்ளது எனப் புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) வெளியிட்டுள்ளது.
மொத்த வேலையின்மை விகிதம் (சவூதி மற்றும் சவூதி அல்லாதவர்களுக்கு)மூன்றாம் காலாண்டில் 5.1 சதவீதத்தில் இருந்து 0.7 சதவீதமாகக் குறைந்து நான்காவது காலாண்டில் 4.4 சதவீதமாக உள்ளது, சவூதியர்களுக்கான வேலையின்மை விகிதம் முந்தைய காலாண்டில் இருந்த 8.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் நான்காம் காலண்டில் 7.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 60.9 சதவிகிதமாக இருந்த மொத்த மக்கள்தொகைக்கான தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் 0.5 சதவிகிதம் சரிவு ஏற்பட்டு நான்காவது காலண்டில் 60.4 சதவிகிதமாக உள்ளது.2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 51.6 சதவிகிதத்துடன் இருந்த மொத்த சவூதியர்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் 0.3 சதவிகிதம் சிறிய மாற்றத்தைத் தரவு காட்டி நான்காவது காலாண்டில் 51.3 சதவிகிதமாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில், சுமார் 1.9 மில்லியன் சவூதி ஆண்களும் பெண்களும் மனித வள மேம்பாட்டு நிதியத்தால் (HADAF) வழங்கப்பட்ட திட்டங்களால் பயனடைந்துள்ளனர், 2023 ஆம் ஆண்டில் சவூதிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக HADAF வழங்கிய ஆதரவுச் செலவுகள் சவூதி ரியால் 8.7 பில்லியனைத் தாண்டியுள்ளது.
தனியார் துறை நிறுவனங்களை ஆதரிப்பதற்காக மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பின் சவூதிமயமாக்கல் திட்டங்கள் மற்றும் முடிவுகள் மற்றும் முன்முயற்சிகளும் தனியார் துறையில் சவுதி ஆண் மற்றும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 2,325,814 என்ற சாதனை எண்ணிக்கையை எட்டுவதற்கு பங்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





