சவூதி அரேபியா தனது வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்காகச் சுமார் $13 பில்லியன் தனியார் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இந்த முதலீடுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 150,000 முதல் 200,000 புதிய ஹோட்டல் அறைகளை அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
சவூதியின் சுற்றுலாத்துறை துணை அமைச்சர் இளவரசி ஹைஃபா அல் சௌத், ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில், 2023ல் சுமார் $66 பில்லியனாக இருந்த சுற்றுலா வருவாயை இந்த ஆண்டு 85 பில்லியன் டாலராக உயர்த்தும் அரசின் இலக்கைச் சுட்டிகாட்டினார்.
தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5% பங்களிப்பையும், 2030 ஆம் ஆண்டுக்குள் 10% பங்களிப்பை வழங்குவதை சுற்றுலாத் துறை இலக்காகக் கொண்டுள்ளது என்றும், சவுதி அரேபியா கணிசமான நிதியைக் கிடியா என்டர்டெயின்மென்ட் சிட்டி போன்ற பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்குச் செலுத்தி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சவூதி 2023 இல் 100 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும், முக்கியமாக உள்நாட்டுப் பயணிகள், சர்வதேச பார்வையாளர்கள் சுமார் 27 மில்லியன் பேர்களையும் வரவேற்றது.இந்த வருகைகளில் பெரும்பகுதி வணிக நோக்கங்களுக்காக இருந்தது, பல முக்கிய சுற்றுலா திட்டங்கள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால் ஓய்வு நேர பயணங்கள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த தசாப்தத்தில் இந்தத் துறையில் சுமார் 800 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யும் திட்டத்துடன், 2030 ஆம் ஆண்டுக்குள் 80 பில்லியன் டாலர் வரையிலான தனியார் சுற்றுலா முதலீட்டைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் முயற்சி விரிவடைகிறது.





