கைத்தொழில் விவகாரங்களுக்கான தொழில் மற்றும் கனிம வள பிரதி அமைச்சர் பொறியியலாளர்.கலீல் பின் சலாமா தஹ்ரானில் உள்ள அரம்கோவின் பிரதான தலைமையகத்திற்கு சென்று மூத்த சவுதி அராம்கோ அதிகாரிகளைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் தேசிய தொழில்துறை மூலோபாயத்தின் இலக்குகளை அடைவதில் இரு தரப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும், பொருளாதார பல்வகைப்படுத்தலை அடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் எண்ணெய் அல்லாத ஏற்றுமதிகளை மேம்படுத்துவதன் நோக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த மூலோபாயத்தின் மூலம், சவூதி அரேபியா தனியார் துறையை மேம்படுத்தவும், தொழில்துறையின் நெகிழ்வுத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்கவும், பொருளாதாரத்தின் தொடர்ச்சிக்கான முக்கியமான பொருட்களைத் தொடர்ந்து அணுகுவதை உறுதி செய்கிறது.





