ரியாத்தில் நடைபெற்ற LEAP Tech Conference 2024ன் செய்தியாளர் கூட்டத்தில், சவூதி டிஜிட்டல் பொருளாதாரம் சுமார் 10%; 460 பில்லியன் ரியால்கள் அதிகர்த்து, வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளதாகச் சவூதி அரேபியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அப்துல்லா அல்-ஸ்வாஹா கூறினார்.
தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சந்தை 183 பில்லியன் ரியால்களாக வளர்ந்துள்ளதாக அல்-ஸ்வாஹா கூறினார். தனது தொடக்க உரையில், அல்-ஸ்வாஹா இந்த மாநாடு 11.9 பில்லியன் டாலர் தொழில்நுட்ப முதலீடுகளைக் கொண்டுவரும் எனத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் அமேசான் வெப் சர்வீசஸ், ஐபிஎம், டேட்டாவால்ட் மற்றும் சர்வீஸ்நவ் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடனான முக்கிய ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டன. LEAP Tech Conference 2024 இன் 3வது பதிப்பில் சர்வதேச உயரதிகாரிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட 1,100 க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்றனர்.





