ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் (ZATCA) ஹதிதா துறைமுகம் மூலம் 63,000 க்கும் மேற்பட்ட கேப்டகன் மாத்திரைகளைக் கடத்த இருந்த இரண்டு முயற்சிகளை முறியடித்தது.
சவூதி அரேபியாவுக்குள் நுழையும் இரண்டு வாகனங்கள் ஒன்றின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 41,279 கேப்டகன் மாத்திரைகளையும், இரண்டாவது முயற்சியாகத் துறைமுகத்திற்கு வந்த மற்றொரு வாகனத்தில் இதே முறையைப் பயன்படுத்தி 22,000 மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டன என ZATCA செயற்பாட்டாளர்கள் கண்டுபிடித்தனர்.
மேலும் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, ZATCA போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகத்துடன் ஒருங்கிணைத்து, இது நாட்டிற்குள் கடத்தப்பட்ட பொருட்களைப் பெற்ற ஐந்து நபர்களைக் கைது செய்ய வழிவகுத்தது.
கடத்தலைத் தடுப்பதிலும், தேசியப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பை ஆணையம் வலியுறுத்தி, கடத்தல் நடவடிக்கைகள்குறித்த அறிக்கைகள், நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஹாட்லைன் (1910), மின்னஞ்சல் (1910@zatca.gov.sa) அல்லது சர்வதேச எண் (00966114208417) மூலம் ரகசியமாகச் செய்யலாம் எனவும், தகவலறிந்தவர்கள் தங்கள் தகவலைச் சரிபார்த்தபின் நிதி வெகுமதிக்கு தகுதியுடையவர்களாவர் என ஆணையம் குறிப்பிட்டுள்ளது.