Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்டுள்ள முதல் சர்வதேச இசை அகாடமி.

சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்டுள்ள முதல் சர்வதேச இசை அகாடமி.

228
0

சவூதி அரேபியாவின் முதல் சர்வதேச மியூசிக் அகாடமியான Nahawand Center தைஃப் நகரில் தொடங்கப்பட்டது.கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தைஃபில் நடைபெற்ற விழாவில், Nahawand Academy of Arts and the Gnesins Russian Academy of Music இடையே இது தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Gnesins Academy மாஸ்கோவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும், ரஷ்யாவின் மிக முக்கியமான சர்வதேச இசை அகாடமிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது, மேலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் பல கிளைகளைக் கொண்டுள்ளது.

Nahawand மையத்தின் பொது மேற்பார்வையாளர் டாக்டர் அப்துல்லா ரஷாத், சவுதி அரேபியாவில் இசைத்துறையில் பணிபுரிபவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

Gnesins அகாடமியின் பிரதிநிதியான Angie Zadan, இரு தரப்புக்கும் இடையிலான கூட்டாண்மையின் முடிவிற்கு தனது மகிழ்ச்சியையும், இசை ரசனையை உயர்த்துவதற்கும் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை வளர்ப்பதற்கும், இரு நாடுகளின் வரலாறு மற்றும் நாகரீக இசைக் கலைகளை அறிமுகப்படுத்த இந்த ஒப்பந்தம் முக்கிய பங்களிக்கும் எனச் சுட்டிக்காட்டினார்.

பங்கேற்பாளர்கள் அகாடமியின் பல்வேறு வசதிகளைப் பார்வையிட்டு, அதில் பியானோ மற்றும் குரல் துறை உட்பட சில மாணவர்களின் நிகழ்ச்சிகள், வீணை மற்றும் ஓரியண்டல் இசைத் துறை, உள்ளடக்க உருவாக்கப் பிரிவு மற்றும் விளக்கக்காட்சித் துறை ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!