அட்டர்னி ஜெனரல் ஷேக் சவுத் அல்-முவாஜப் தலைமையிலான அரசுத் தரப்பு, பொது வழக்கின் கீழ் அறிவுசார் சொத்துரிமைப் பிரிவை நிறுவ ஒப்புதல் அளித்தது.
இது பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மான் அவர்களால் தொடங்கப்பட்ட தேசிய அறிவுசார் சொத்து வியூகத்தை செயல்படுத்தவும், அறிவுசார் சொத்து தொடர்பான பகுதிகளில் நீதித்துறை சேவைகளை வழங்குவதற்கும், பொருத்தமான சூழலை உருவாக்குவதற்கும் உதவும்.
வர்த்தக முத்திரை சட்டம் மற்றும் காப்புரிமைச் சட்டத்திற்கு மேலதிகமாகச் சவுதி அறிவுசார் சொத்துரிமை ஆணையத்தால் குறிப்பிடப்படும் காப்புரிமைப் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுசார் சொத்துரிமை மீறல் தொடர்பான வழக்குகளில் கிரிமினல் நடவடிக்கைகளை விசாரிப்பதற்கும் தாக்கல் செய்வதற்கும் இந்த வழக்குத் தொடரும் பிரிவு பொறுப்பாகும்.
அறிவுசார் சொத்துரிமை மீறல் தொடர்பான வழக்குகளின் குற்றவியல் பாதுகாப்பிற்கான சட்டத் தகுதியின் தரங்களுக்கு ஏற்பப் பயிற்சி பெற்ற மற்றும் தேவையான திறன்களைப் பெற்ற தகுதிவாய்ந்த அரசு வழக்கறிஞர்களின் குழுவைக் கொண்டிருக்கும் இந்த வழக்குகள் படைப்பாற்றல் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது.