வருகின்ற பிப்ரவரி 17 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் Winter Tamil Fest எனும் தமிழர்களின் ஒன்றுகூடல் விழா கனவு மெய்ப்பட எனும் தலைப்பில் காமெடி கலாட்டா நிகழ்ச்சியாக நடைபெற இருக்கின்றது.
விஜய் டி.வியின் கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் நகைச்சுவைக் கலைஞர்கள் வெள்ளித்திரை நாயகர்கள் அசார், டி.எஸ்.கே மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ் மக்களை மகிழ்ச்சிப் படுத்த இருக்கின்றனர்.
நிகழ்ச்சியில் கடந்த 15 நாட்களில் பள்ளி மாணாக்கர்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த பல்வேறு போட்டிகளான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, பாட்டுப் போட்டி, சமையல் போட்டிகளின் முடிவுகளை அறிவித்து வெற்றியாளர்களுக்கு நிகழ்ச்சியில் பரிசுகள், ஷீல்டுகள் வழங்கிக் கவுரவிக்க உள்ளனர்.
மேலும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்ட 300 க்கும் அதிகமானோருக்கு சான்றிதழ்கள், மெடல்கள், பரிசுகள் வழங்க இருப்பதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.
மேலும் காமெடி கலாட்டா நிகழ்ச்சியில் இன்றையச் சூழலில் முழுமையான மகிழ்ச்சி என்பது திருமண வாழ்விற்கு முன்பா அல்லது பின்பு எனும் நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற இருப்பதாகவும் அதில் ஆசிரியர்கள் குரு மற்றும் பானு ஹமீத் ஆகியோருடன் அஜிதா சலீம் இவர்களுடன் புதுமுகங்களாக ஆசிரியர் கணேஷ் குமார், சாதிக் பாட்சா மற்றும் ஏகப்பன் ஆகியோரும் பேச இருக்கின்றனர்.
தனித்திறன் போட்டிகளும், கலாச்சார நிகழ்வுகளும் கொண்ட நிகழ்ச்சியாகத் தமிழ் மக்களை மகிழ்ச்சிப் படுத்த நடத்த இருப்பதாக ஒருங்கிணைப்பாளரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான தஞ்சை லயன் ஜாஹிர் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு நுழைவுச்சீட்டு அவசியம் என்றும் பத்து வயது வரை நுழைவு இலவசம் என்றும் டிக்கெட்டுகள் ஷரஃபியா லக்கி தர்பார், சாரா தவ்பா அரப் லங்கா சிலோன் ஹோட்டலிலும், அஜீஜியாவில் சதாப் தென்னிந்திய உணவகம், ஆதாப் பிரியாணி கடைகளிலும், பலத்தில் பாப்புலர் டெக்ஸ்டைல் மற்றும் சாரா ஹிராவில் நைல் கஃபடேரியா அன்சாரி இட்லி கடைகளிலும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.