தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) செய்தித் தொடர்பாளர் ஹுசைன் அல்-கஹ்தானி சவூதி அரேபியாவில் இந்த ஆண்டு வெப்பமான குளிர்காலம் நிலவுகிறது எனக் கூறினார்.
சவூதியில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு குளிர்காலம் வெப்பமான குளிர்காலமாகக் கருதப்படுகிறது, மேலும் குறைந்தபட்ச வெப்பநிலை எதுவும் பதிவு செய்யப்படவில்லை, முந்தைய ஆண்டுகளில் பூஜ்ஜியத்திற்கு கீழே ஏழு டிகிரி செல்சியஸ் பதிவானது என்றும், வரும் நாட்களில் இன்னும் குளிர் அலைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
அடுத்த வாரம் வரை மழைக்கான வாய்ப்பு தொடரும் என்றும், சவூதியின் அனைத்து பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என்றும், இந்த ஆண்டு குளிர்காலத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை வடக்கு அல்-ஜூஃப் பகுதியில் உள்ள குரையாத் கவர்னரேட்டில் ஒரு டிகிரி செல்சியஸ் ஆகும், ”என்று அல்-கஹ்தானி கூறினார்.
மக்கா மற்றும் அல்-பஹா பகுதிகளைப் பாதிக்கும் மழை மேகங்கள் அல்-காசிம், ரியாத் மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகள் வரை பரவியுள்ளது என வானிலை நிபுணரும், சவுதி காலநிலை சங்கத்தின் நிறுவன உறுப்பினருமான டாக்டர் ஜியாத் அல்-ஜுஹானி கூறினார்.





