Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் நிகழ்வுகளை நினைவுகளாகவும், நினைவுகளை சாதனைகளாகவும், சாதனைகளை வரலாறாகவும் மாற்றும் சாதனை தமிழன்.

நிகழ்வுகளை நினைவுகளாகவும், நினைவுகளை சாதனைகளாகவும், சாதனைகளை வரலாறாகவும் மாற்றும் சாதனை தமிழன்.

252
0

சாதனைகளுக்குச் சாவால்கொடுக்கும் சவூதியில் வசிக்கும் திருச்சியை சேர்ந்த சாதனையாளர். ஜனவரி மாதம் சவூதி அரேபியா மற்றும் பக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளில் நடைபெற்ற ஐந்து நிகழ்வுகளைப் பத்துமணி நேரத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பார்வையாளர்களிடம் கேள்வி கேட்டுப் பரிசுகளை வழங்கியும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கியும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கவுரவித்ததோடு அந்நிகழ்வுகளில் விழா பேருரை நிகழ்த்தியது உலக சாதனை நிறுவனங்களின் பார்வையை ஈர்த்தது.

இது போன்று இதுவரை உலகில் எங்கும் நடைபெறாததை கருத்தில் கொண்டு கின்னஸ் உட்பட அனைத்து உலக சாதனை நிறுவனங்களும் இவரைத் தொடர்புகொண்டு விருதுகள் வழங்கிக் கவுரவித்து வருகின்றனர்.

அதன்படி திருச்சியை சேர்ந்த பத்ருதீன் அப்துல் மஜீத் வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றார். நமது சவூதி தமிழ் மீடியா செய்தியின் மூலம் அறிந்துகொண்ட ரஃபா உலக சாதனை புத்தகத்தின் அலுவலர்கள் சென்னையில் law cafe அரங்கத்தில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் அதன் தலைவர் பிரசன்னா மற்றும் ஜவாஹிருல்லா MLA முன்னிலையில் மதிமுக துனைபொதுச்செயலாளரும் மல்லை தமிழ் சங்கத்தின் தலைவருமான மல்லைசத்யா அவர்கள் ரபா உலகசாதனை விருதைத் திருமிகு பத்ருதீன் அப்துல் மஜீத் அவர்களுக்கு வழங்கிக் கவுரவித்தனர்.

அதனைத் தொடரந்து இந்திய செய்திகளில் இவரின் சாதனை மிகவும் கவனம் ஈர்த்தது. அதனைத்தொடர்ந்து கலாம் உலகசாதனை நிறுவனத்தால் அங்கிகரிக்கப்பட்டு அந்நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க இஸ்லாமிய போதகர் திருமிகு அப்துல் பாசீத் புகாரி சவூதி அரேபியாவிற்கு வந்து ஜூபைலில் உள்ள Universal inspection company வளாகத்தி்ல் பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மனிதநேய பண்பாளர் பத்ருதீன் அப்துல் மஜீத் அவர்களுக்குக் கலாம் உலக சாதனை விருது வழங்கிக் கவுரவித்தனர்.

இந்நிகழ்வில் சவூதியில் வசிக்கின்ற பல்வேறு தமிழ் அமைப்புகள் உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த 300பேர் கலந்து கொண்டனர்.

மேலும் உலகசாதனைக்கு ஊன்றுகோளாக அமைந்த ஐந்து நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள் பக்ரைன் பாரதி தமிழ்ச்சங்கம், பெரியார் tostmaster, SATA, ஜூபைல் தமிழ்ச்சங்கம், மற்றும் TRIPA நிகர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

அதன் பின் பேசிய சவூதி தமிழ்கலாச்சார மையத்தின் தலைவர் ரஹ்மத்துல்லா இந்த உலகசாதனையின் மூலம் மிகப்பெரும் உந்துதலை இளம்தலைமுறையினருக்கு ஏற்படுத்தியுள்ளார் என்றும். மேலும் இது போன்ற பல சாதனை விருதுகளைப் பெருவதற்கு பெரும் தகுதியானவர் திருமிகு பத்ருதீன் எனக் குறிப்பிட்டார், காரணம் இன்றைய சூழலில் மனிதமும் மனிதநேயமும் விலைபேசப்படுகிறது. ஒருவருக்கொருவர் உதவவும் அரவணைத்துக்கொள்ளவும் விலைபேசப்படுகிறது. ஆனால் உலகசாதனை விருதுபெற்ற திருமிகு பத்ருதீன் அவர்கள் தனக்கு கிடைக்கபெற்ற பொருட்செல்வங்கள் தனக்குமட்டுமின்றி தான் சாரந்த சமூகத்திற்கும் சமுதாயத்திற்கும் எனத் தினம்தேறும் நாடி வருபவர்களுக்கு வாரி வழங்கும் கொடைவள்ளலாகத் திகழ்கிறார் ஆகையால் தான் பல்வேறு மொழிகளைப் பேசும் இந்திய மக்கள் பாகுபாடின்றி அவர்களின் விழாவிற்கு தமிழகத்தைச்சேர்ந்த திரு பத்ரூதீன் அவர்களைச் சிறப்பு விருந்தினராக அழைக்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து சவூதியில் இயங்கக்கூடிய பல்வேறு Multinational company களின் நிர்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்து வாழ்த்துரை வழங்கினர், அதன்பின் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர், அதன்பின் ஜூபைல் இந்தியன் பன்னாட்டுப்பள்ளி சேர்மன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் NRTIA கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைப்பினரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

அதனைத்தொடர்ந்து ஏற்புரை வழ்ங்கிய திருமிகு பத்ருதீன் அவர்கள், தாயகத்திலிருந்து வருகைதந்த கலாம் உலகசாதனை அமைப்பினர் விழா நடத்த கோரிக்கை வைத்தனர் எனது அலுவலக வளாகத்திலே நடத்திக்கொள்ள அனுதித்தோம். உடனடியாக இத்துனை நல்உள்ளங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருப்பது எனக்கு மிகுந்து மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார்.

மேலும் தனது சாதனையை முதலில் செய்தியாக வெளியிட்ட சவூதி தமிழ் மீடியாவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பளித்த ஐந்து அமைப்பு நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

மேலும் இது போன்ற பல்வேறு சாதனைகளை அடைய அனைவரும் முயல வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். ரபா உலகசாதனை, கலாம் உலகசாதனை தொடர்ந்து விரைவில் கின்னஸ் உலக சாதனை அங்கிகாரம் கிடைக்கப்பெறும் ஆகவே மீண்டும் விரைவில் அந்நிகழ்விற்கு அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!