ஜனவரி 25 முதல் 31 வரை, நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினரால் மேற் கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு வாரத்திற்குள் சுமார் 18,000 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.10,874 பேர் குடியுரிமை முறையை மீறியதற்காகவும்,4,123 பேர் எல்லை பாதுகாப்பு விதிகளை மீறியதற்காகவும், தொழிலாளர் சட்டங்களை மீறிய 2,899 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
எல்லையைத் தாண்டி நாட்டிற்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 937 ஐ எட்டியுள்ளது, இதில் 29% ஏமனியர்கள், 69% எத்தியோப்பியர்கள் மற்றும் 2% பிற நாட்டினர்.நாட்டிற்கு வெளியே எல்லையைக் கடக்க முயன்ற சுமார் 48 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளை அடைக்கலப் படுத்தியதற்காக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
விதிமுறைகளை மீறியதற்காக மொத்தம் 56,686 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 51,445 ஆண்கள் மற்றும் 5,241 பெண்கள் ஆவர்.பயண ஆவணங்களைப் பெறுவதற்காக 49,721 நபர்களும், பயண முன்பதிவுகளை முடிக்க 1,789 நபர்களும் பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் 10,096 நபர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
குற்றவாளிக்குத் தங்குமிடம் அல்லது ஏதேனும் உதவி வழங்குபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக 1 மில்லியன் ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்கா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணங்களில் 911 என்ற எண்ணையும், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள 999 மற்றும் 996 என்ற எண்களையும் அழைப்பதன் மூலம் விதிமீறல் வழக்குகளையும் தெரிவிக்குமாறு உள்துறை அமைச்சகம் மக்களை வலியுறுத்தியுள்ளது.





