Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் தனிநபர் சேமிப்புத் தயாரிப்பை அறிமுகப்படுத்த உள்ள சவூதியின் நிதி அமைச்சகம் மற்றும் தேசிய கடன் மேலாண்மை...

தனிநபர் சேமிப்புத் தயாரிப்பை அறிமுகப்படுத்த உள்ள சவூதியின் நிதி அமைச்சகம் மற்றும் தேசிய கடன் மேலாண்மை மையம்.

179
0

சவூதியின் நிதி அமைச்சகம் மற்றும் தேசிய கடன் மேலாண்மை மையம் (NDMC) தனிநபர்களுக்கான முதல் சேமிப்புத் தயாரிப்பை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை வெளியிட்டது.

Sakookun Hukoomiya(அரசாங்கப் பத்திரங்கள்)என்ற அரபு சொற்றொடரின் முதல் எழுத்துக்களில் இருந்து பெறப்பட்ட Saha எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சேமிப்பு திட்டம், பிப்ரவரி 4,ஞாயிற்றுக்கிழமை புழக்கத்தில் விடப்படும்.

saha தயாரிப்பின் வெளியீடு, தனிநபர்களிடையே அவர்களின் வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமிப்பதற்காக ஒதுக்கி வைப்பதன் மூலம் சேமிப்புப் பொருட்களின் விநியோகத்தை அதிகரிப்பதற்கும், சேமிப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பங்களிக்கும் என நிதி அமைச்சகத்தின் வழிநடத்தல் குழுவின் தலைவர் அப்துல் அசிஸ் அல்-ஃபுரைஹ் கூறினார்.

இந்த முயற்சியானது, வங்கிகள், நிதி மேலாளர்கள், நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பலவற்றின் மூலம் பல்வேறு வகையான தனிநபர்களுக்கான குறிப்பிட்ட இலக்குகளுக்காகப் பல சேமிப்புத் தயாரிப்புகளை உருவாக்கித் தொடங்குவதில் தனியார் துறை ஒத்துழைக்கவும் பங்கேற்பதற்கும் ஊக்கத்தை அளிக்கிறது என NDMC இன் CEO ஹனி அல்-மதீனி கூறினார்.

இஸ்லாமிய ஷரியாவுடன் இணக்கமான ‘சாஹா’ என்ற சேமிப்புத் தயாரிப்பு அல்-அஹ்லி நிதி நிறுவனம், அல் ஜசிரா பைனான்சியல் மார்க்கெட் கம்பெனி, அலின்மா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம், அல்-அவல் முதலீட்டு நிறுவனம் மற்றும் அல்-ராஜி கேபிடல் நிறுவனம் போன்ற பல நிதி நிறுவனங்களின் டிஜிட்டல் சேனல்கள் மூலம் வழங்கப்படும்.

Saha தயாரிப்பின் முதல் பதிப்பிற்கான சந்தா காலம் பிப்ரவரி 4 ஞாயிற்றுக்கிழமை முதல் பிப்ரவரி 6 செவ்வாய் வரையிலான மூன்று நாள் காலப்பகுதியில் இருக்கும், தயாரிப்பு மற்றும் அதன் வெளியீடுகளின் காலெண்டரின் விவரங்களை https://ndmc.gov.sa/gov-sukuk/Pages/default.aspx. என்ற இணைப்பின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் எனத் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!