சவூதியின் பெரும்பாலான பகுதிகளை, லேசான மற்றும் மிதமான மழை, தூசி நிறைந்த மேற்பரப்பு காற்று, அதிக அலைகள், லேசான பனிப்பொழிவு மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகிய வானிலை ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும் எனவும், தெற்கு அசிர் பகுதியில் லேசான மழையும், ஜசான் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) கணித்துள்ளது.
அல்-பஹா பகுதியில் லேசானது முதல் மிதமான மழையும் ,மக்காவின் தாயிஃப் மற்றும் தபூக், ஹஃப்ர் அல்-பாடின், அல்-கஃப்ஜி, அல்-ஈஸ், அல்-உலா, யான்பு மற்றும் கைபர், வடக்கு எல்லைகள் மற்றும் அல்-ஜூஃப் பகுதிகள் லேசான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தபூக், மதீனா, மக்கா, அல்-ஜூஃப், வடக்கு எல்லை பகுதிகளில் மணிக்கு 45 கிமீ அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் தூசி நிறைந்த காற்று வீசும் எனவும், ரியாத், கிழக்கு மாகாணம் மற்றும் காசிம் பகுதிகளில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் தூசி நிறைந்த காற்றினால் பாதிக்கப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தபூக், மதீனா, மக்கா, ஆசிர் மற்றும் ஜசான் ஆகிய கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் இரண்டரை மீட்டருக்கும் அதிகமாக அலைகள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜபல் அல்-லாஸ், அல்கான் மற்றும் அல்-தாஹர் தபூக் பகுதி, அல்-ஜூஃப் மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகள் லேசான பனிப்பொழிவு ஏற்படும்.





