நாட்டின் உணவுத் துறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் டிரான்ஸ்-ஃபேட்டி ஆசிட்கள் (ITFA) (செயற்கை கொழுப்புகள்) இல்லாதவை என்ற அங்கீகார சான்றிதழைப் பெற்றதற்காக உலக சுகாதார அமைப்பு (WHO) சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையத்தை (SFDA) கௌரவித்து, உலகின் முதல் ஐந்து நாடுகளில் சவூதி அரேபியாவும் உள்ளது என அறிவித்தது.
திங்கட்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் WHO இன் முயற்சிகள் குறித்து SFDA இன் CEO டாக்டர். ஹிஷாம் அல்ஜாதே பாராட்டினார்.
சமூகத்தில் உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்துதல் மற்றும் உப்பு, சர்க்கரை ஆகியவற்றைக் குறைப்பதற்கான கொள்கைகளைச் செயல்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும் என்றும், நுகர்வோருக்குக் கலோரி தகவல்களை உணவு நிறுவனங்கள் வெளியிட வேண்டும் என்றும் அல்ஜாதே கூறினார்.
ஜனவரி 2020 முதல், செயற்கை கொழுப்புகளின் முக்கிய ஆதாரமான ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்களை நாட்டின் உணவு விநியோகத்தில் இருந்து SFDA தடை செய்துள்ளது. செயற்கை டிரான்ஸ் கொழுப்புகளின் நுகர்வு ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 500,000 இறப்புகளை ஏற்படுத்துகிறது, மேலும் இது இருதய நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
டிரான்ஸ்-ஃபேட்டி ஆசிட்களின் நுகர்வை குறைக்க SFDA கட்டாய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அல்ஜாதே கூறினார். செயற்கை டிரான்ஸ் கொழுப்புகளிலிருந்து உணவுப் பொருட்கள் விடுபட்டதா என்பதைச் சரிபார்க்க ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக SFDA இன் உணவுத் துறையின் இயக்குநரான பைசல் பின் சுனைத் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





