சவூதி அரேபியாவின் “இளைஞர் மேம்பாட்டு வியூகத்தை” தொடங்கி வைத்து, நிகழ்ச்சியில் பேசிய மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் இன்ஜி.அஹ்மத் அல்-ராஜி சவூதி அரேபியாவின் மக்கள்தொகையில் 44 சதவீதமும், அதன் பணியாளர்களில் 78 சதவீதமும் இளைஞர்கள் உள்ளதாகக் கூறினார்.
இந்த உத்தியானது 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்குப் பல்வேறு திட்டங்களை வழங்கி அனைத்து துறைகளிலும் அவர்களின் வாய்ப்புகளை மேம்படுத்தி அவர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
” இளைஞர்களே செல்வம்” என்ற ஐந்து முக்கிய தூண்களின் அடிப்படையில், இந்த உத்தி 10 இலக்குகள், 20 முயற்சிகள் மற்றும் 40 திட்டங்களைச் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் இளைஞர் பிரிவில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும், 24 முக்கிய துறைகளில் இளைஞர்களை ஒருங்கிணைக்க வழிகாட்டுவதன் மூலம் அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் பங்கு வகிக்க முடியும் என்றும் அல்-ராஜி வலியுறுத்தினார்.





