ஜூலை 21, 2024 முதல் தனியார் துறையில் 25% பொறியியல் தொழில்களைச் சவூதிமயமாக்கும் முடிவை, மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், நகராட்சி மற்றும் ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் அறிவித்துள்ளது. பொறியியல் துறையில் ஐந்து ஊழியர்கள் பணிபுரியும் அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆண் மற்றும் பெண் குடிமக்களுக்கு அதிக உந்துதல் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சந்தையில் பங்கேற்பின் அளவை உயர்த்த இந்த முடிவைப் பின்பற்றிச் செயல்படுத்த பணிபுரிவதாக நகராட்சி மற்றும் கிராமப்புற விவகாரங்கள மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப அதன் செயலாக்கத்தை அமைச்சகம் மேற்பார்வை செய்யும். மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனம் வழங்கும் சலுகைகளால் தனியார் துறை நிறுவனங்கள் பயனடையும் என்று அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. மனித வள மேம்பாட்டு நிதி (HADAF) மூலமாகவும் வேலைவாய்ப்புத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.





