20 ஆண்டுகளில் 2023 மிகக் குறைந்த தூசி நிறைந்த ஆண்டாக மணல் மற்றும் தூசி புயல் எச்சரிக்கையின் பிராந்திய மையம் தெரிவித்துள்ளது. 2003 மற்றும் 2022 க்கு இடைப்பட்ட காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், தூசி மற்றும் மணல் புயல்களின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கும் குறைப்பதற்கும் சவூதியின் இடைவிடாத முயற்சிகள் காரணமாக இச்சாதனையை எட்டியுள்ளது.
2023 ஆம் ஆண்டில், ரியாத் நகரம் 12 ‘தூசி-நிலை’ நாட்களைப் பதிவுசெய்தது, இது 71 சதவிகிதம் குறைப்பு, அதே நேரத்தில் துரைஃப் கவர்னரேட் 10 தூசி-நிலை நாட்களைப் பதிவுசெய்தது, இது 78 சதவிகிதம் குறைந்துள்ளது. வடக்கு அல்-ஜுஃப் பகுதியில் 14 தூசி நிலை நாட்கள் பதிவாகியுள்ளது, இது 59 சதவீதம் குறைந்துள்ளது என்று மையம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம் மற்றும் சவூதி பசுமை முன்முயற்சி ஆகியவை தூசி மற்றும் மணல் புயல்களை எதிர்த்துப் போராடுவதற்கும் நிலையான சுற்றுச்சூழல் அமைப்புகளில் அவற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் தங்கள் பிராந்திய திட்டங்களின் மூலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளன. பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானால் தொடங்கப்பட்ட பசுமை மத்திய கிழக்கு உச்சி மாநாட்டின் விளைவுகளில் தூசி மற்றும் மணல் புயல் எச்சரிக்கைக்கான பிராந்திய மையம் ஒன்று.