பொது பொழுதுப் போக்கு ஆணையத்தின் (GEA) தலைவர் துர்கி அல் ஷேக் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தகைநகர் ரியாத்தின் பவுல்வர்டு நகரத்திற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றும் அளவுக்கு அதிகமான பார்வையார்கள் ஒரே சமயத்தில் குவிந்ததும் காரணம் என்றும் தெரிவித்தார்.
வரலாற்று சாதனையாக மண்டலத்தின் வரலாற்றில் முதல் முறையாக 200,000 பார்வையாளர்களைத் தாண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ரியாத் சீசன், அதன் நான்காவது பதிப்பான “பிக் டைம்” என்ற கருப்பொருளில், பல்வேறு பொழுதுபோக்கு விருப்பங்களையும் உலகளாவிய அனுபவங்களையும் வழங்குகிறது.
இது ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால மாதங்களில் ரியாத்திற்கு உலகளவில் பார்வையாளர்களை ஈர்க்கிறது, ஆயிரக்கணக்கான கச்சேரிகள், கண்காட்சிகள் மற்றும் பிற தனிப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகள் இடம்பெறும்.
ரியாத் சீசன் கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களைத் தொடர்ந்து வழங்குவதோடு இது உலகளாவிய பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கான குறிப்பிடத் தக்க மையமாக ரியாத்தின் நிலையை வலுப்படுத்துகிறது குறிப்பிடத்தக்கது.