Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் உலகளாவிய அலுமினிய உற்பத்தியில் வளைகுடா பகுதி 10% பங்கு வகிக்கிறது.

உலகளாவிய அலுமினிய உற்பத்தியில் வளைகுடா பகுதி 10% பங்கு வகிக்கிறது.

270
0

வளைகுடா பகுதி உலகளவில் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி வசதிகளைக் கொண்டு, உற்பத்தியில் சுமார் 10 சதவீதத்தைக் கொண்டுள்ளது எனச் சுரங்க விவகாரங்களுக்கான தொழில்துறை மற்றும் கனிம வளங்களின் துணை அமைச்சர் இன்ஜி.காலித் அல்-முதைஃபர் கூறினார்.

அலுமினியத்திற்கான உலகளாவிய தேவை 2030 க்குள் 20 – 30 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டு இது அனைத்து அலுமினிய தொழில்களுக்கும் வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் என ரியாத்தில் நடைபெற்ற அரபு சர்வதேச அலுமினிய மாநாட்டில் (ARABAL) உரையாற்றும் போது அமைச்சர் கூறினார்.

போக்குவரத்து, மின்சார வாகனங்கள், கட்டுமானம் மற்றும் உணவு பேக்கேஜிங் போன்ற வழக்கமான துறைகளில் அலுமினியத்தின் பரவலான பயன்பாட்டையும், உலகளாவிய ஆற்றல் மாற்றத்தை இயக்குவதில் அதன் இன்றியமையாத பங்கையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

1.3 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்ட சவூதியின் மிகுதியான கனிமச் செல்வம், அதன் வலுவான உள்கட்டமைப்பு, வலுவான உலகளாவிய முதலீட்டு இருப்பு மற்றும் நன்கு படித்த மற்றும் இளைஞர்கள் நிறைந்த பணியாளர்கள் ஆகியவற்றை அவர் சுட்டிகாட்டினார்.

“உலகளவில் சிறந்த 10 அலுமினிய உற்பத்தியாளர்களில் ஒன்றாகச் சவூதியின் தரவரிசையை மேம்படுத்துவதே இறுதி நோக்கம்” என்று அவர் மேலும் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!