ஊடகத்துறையை மேம்படுத்த முயலும் சவுதி ஊடக மன்றத்தின், மூன்றாவதுக் கூட்டம் தலைநகர் ரியாத்தில் பிப்ரவரி 19 முதல் 21, 2024 வரை நடைபெறவுள்ளது எனச் சவுதி ஒலிபரப்பு ஆணையம்(SBA) நடத்திய உலக தொலைக்காட்சி தின விழாவில் சவுதி ஊடக மன்றத்தின் தலைவரும், சவுதி ஒலிபரப்பு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான முகமது அல்-ஹர்தி அறிவித்தார்.
இந்த மன்றம் ஊடகத் துறையில் சவுதி அரேபியாவின் நிலையை மேம்படுத்தி மிக முக்கியமான உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக அனுபவங்களைக் குறிப்பிட்டு காட்டும்.
மேலும் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்களுடனும் தொடர்புப் பாலங்களை உருவாக்கி ஆவணப்படுத்துவதன் அவசியத்தை அல்-ஹார்தி சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஊடக நிகழ்வுகளை நடத்துவது, ஊடகத் துறையின் தரத்தை அதிகரிப்பதோடு தொடர்ந்து மாறிவரும் இந்தத் துறையில் சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் அவர்களை ஒருங்கிணைக்கும் என்று அவர் கூறினார்.
மன்றத்தின் செயல்பாடுகளில் தொழில்நுட்ப மற்றும் ஊடக நிகழ்வான ஃபியூச்சர் ஆஃப் மீடியா எக்சிபிஷன் “ஃபோமெக்ஸ்” அடங்கும், இது ஊடகத் துறையில் சமீபத்திய அனுபவங்களையும், நவீன தொலைக்காட்சி மற்றும் வானொலி தயாரிப்பு நடவடிக்கைகளையும் வழங்கும்.
இந்த நிகழ்வு பல்வேறு துறைகளில் அனுபவமும் திறமையும் கொண்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் குழுவினால் வழங்கப்படும் சிறப்பு வாய்ந்த பட்டறைகளை அவர்கள் காண்பதால், ஊடகத் துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
மன்றத்தின் ஒவ்வொரு அமர்விலும் வழங்கப்படும் சவுதி மீடியா ஃபோரம் விருதானது, பத்திரிக்கை பிரிவு; ஆடியோ காட்சி தயாரிப்பு வகை; ஊடகத் துறையில் அறிவியல் உற்பத்தி வகை; டிஜிட்டல் மீடியா வகை; ஊடகத் துறையில் புதுமை மற்றும் தலைமைப் பிரிவு; மற்றும் மீடியா எக்ஸலன்ஸ் விருது என ஆறு வகையான விருதுகளை ஆண் மற்றும் பெண் வெற்றியாளர்களுக்கு வழங்குவதன் மூலம் முடிவடைகிறது.





