சவூதி அரேபியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அல்லது பணவீக்க விகிதம் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் அக்டோபரில் 1.6 சதவீதம் பதிவு செய்யப்பட்டதையும் குறிப்பிடத்தக்கது.
புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) வெளியிட்ட அறிக்கைப்படி, பிப்ரவரி 2022 க்குப் பின் பணவீக்க விகிதம் 1.6 சதவீதமாக இருந்தது. 2023 செப்டம்பரில் 1.7 சதவீதமாக இருந்த பணவீக்கம் அக்டோபரில் 0.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
CPI இன் சதவீத மாற்றம் கடந்த ஐந்து மாதங்களில் தொடர்ந்து குறைந்து வருகிறது, மே மாதத்தில் 2.8 சதவீதத்திலிருந்து ஜூன் மாதத்தில் 2.7 சதவீதமாகவும், ஜூலையில் 2.3 சதவீதமாகவும், ஆகஸ்டில் 2 சதவீதமாகவும், செப்டம்பரில் 1.7 சதவீதமாகவும், அக்டோபரில் 1.6 சதவீதமாகவும் இருந்தது.
நுகர்வோர் செலுத்தும் விலையில் ஏற்படும் மாற்றத்தை CPI அளவிடுகிறது. அபார்ட்மெண்ட் வாடகை விலை 14.9% உயர்ந்ததால், வீட்டு வாடகை அக்டோபர் மாதத்தில் 9.3% உயர்ந்துள்ளது. உணவு மற்றும் பானங்களின் விலை 0.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
பணவீக்க விகிதத்தில் உள்ள நிலைத்தன்மை சவூதியின் பொருளாதாரத்தின் வலிமையையும், வேகமாகச் செயல்படுத்தப்படும் பொருளாதார நடவடிக்கைகளின் செயல்திறனையும் பிரதி பலிக்கிறது. உலக அளவில் பணவீக்க விகிதங்கள் அதிகரித்து வருவதை எதிர்கொள்ளச் சவூதி அரேபியா ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.





